புற்று நோய் பாதித்த சிறுவனை உரிய நேரத்தில் கொண்டு செல்ல உதவிய இளைஞர்கள்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் 6 மாவட்டங்களை நான்கு மணி நேரத்தில் கடந்த புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. இதற்காக வாட்ஸ் அப்பை வாக்கிடாக்கி போல பயன்படுத்தி துரிதமாக செயல்பட்டு இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புற்று நோய் தாக்கத்தால் முதுகுத்தண்டுவடம் செயல் இழக்கும் நிலைக்கு செல்வதாகவும் 8 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதால் சிறுவனின் உறவினர்கள் உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

 

விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக சமூக அமைப்பினர் ராமநாதபுரம் புதுச்சேரி இடையே உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள தாமமுக அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான தகவல்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் விட்டனர்.

 

இந்த தகவலை பார்த்து அனைவரும் அந்தந்த ஊர்களில் காவல் துறையை அணுகி உதவி கோரினர். சில சாலைகளில் பல்வேறு அமைப்புகளின் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

ஆம்புலன்ஸ் எந்த பகுதியை அடைகிறது என்ற தகவலை காவலர் வாக்கி டாக்கி மூலம் தெரிவித்தது போன்று வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பகிர்ந்து ஆம்புலன்ஸ் வரும் பாதையை காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்தை கண்காணித்து ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்துக் கொடுத்தனர்.

 

ராமநாதபுரம் புதுக்கோட்டை திருவாரூர் நாகை காரைக்கால் கடலூர் வழியாக 350 கிலோ மீட்டர் தூரமுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை 4.15 நிமிடங்களில் கடந்தனர். ஆம்புலன்சை வேகமாக ஒட்டி சென்ற ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து இடையூறுக்கு உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.


Leave a Reply