‘ டெக்ஸ்பேர் ‘ 2019 ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி !!!

‘ டெக்ஸ்பேர் ‘ 2019 எனும் ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி கோவையில் துவங்கியது.தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சைமாவின் 12வது ‘ டெக்ஸ் பேர் ‘ கண்காட்சி கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று துவங்கியது.முன்னதாக இதன் துவக்க விழாவில் மும்பை டெக்ஸோபிரில் தலைவர் டாக்டர் சீனிவாசன் கண்காட்சி மலரை வெளியிட ஜவுளி பொருட்கள் மற்றும் அதன் சங்கத்தின் தலைவர் அஜய் ஷா மலரை பெற்றுக்கொண்டார்.

இன்று துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில், ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகம் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களின், 320 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பியா, ஜப்பான், சீன நாடுகளை சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ள இதில், செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களுடன், புதுமையான இயந்திரங்கள்,ரோபோட்டிக் வகை என பல்வேறு வகை இயந்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இதனுடன் இணைந்து ‘சைமா பார்ம் டு பினிஷ்’ எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் இங்கு நடைபெற்று வருகிறது., ஜவுளி நிறுவனங்கள் பஞ்சு, பருத்தி விதை, நுால், துணி, ஆயத்த ஆடை மற்றும் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இக்கண்காட்சி இருக்கும் என சைமாவின் தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply