கண்காட்சி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் குற்றச்சாட்டு

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசனின் தமிழக அளவிலான மாநாடு கோவை சுகுணா அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சவுண்ட் சர்வீஸ்,மற்றும் டெக்கரேட்டர்ஸ் ,டெண்ட் ஹவுஸ், என ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் அச்சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் மணிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக ஹையர் ஒலி,ஒளி அமைப்பாளர்கள், பந்தல் அமைப்பாளர்கள், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுபவர்கள், ஆகியோருக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை நீண்ட காலம் வலியுறுத்தி வருவதாகவும், மேலும், கண்காட்சி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும்,கோரிக்கைகள்அனைத்தையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply