விமானத்தில் பயணிகளுக்கு மூச்சு திணறல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மும்பை புறப்படவிருந்தது. ஆனால் ஏர் கண்டிஷன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அந்த விமானம் டெர்மினலுக்கு திருப்பப்பட்டது.

 

ஆனால் விமானத்தை திருப்புவது குறித்து ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை என்றும், அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என்றும் அதில் பயணம் செய்த பயணி பிரகாஷ் ரோஹ்ரா தெரிவித்தார். ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, ‘மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக ஒரே ஒரு பயணியைத் தவிர வேறு யாரும் கூறவில்லை. விமானம் இரவு 8.07 மணிக்கு துபாயில் இருந்து மும்பை புறப்பட்டது’ என்றார்.


Leave a Reply