இறந்த உடலை மாந்திரீகம் மூலம் உயிர் கொடுக்க முடியும் என வந்த மாந்திரீகவாதி

Publish by: --- Photo :


ஒடிஷா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தில் உள்ள டமர்பாஹெல் கிராமத்தை சேந்தவர் சதீஸ் கோபால் (21). இவரை கடந்த புதன்கிழமை அன்று பாம்பு ஒன்று கடித்தது.பின்னர் கோபாலை அங்குள்ள சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.

 

ஆனால் அங்கு உரிய மருந்துகள் இல்லாததால் அவரை மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது பிரேதம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் சதீஸின் குடும்பத்தினர் மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை இருந்த்தாகத் தெரிகிறது.அதனால் இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்று ஒரு மாந்திரீகரை வரவழைத்துள்ளனர்.

அவர் பிணவறைக்குள் உயிரிழந்த இளைஞர் சடலத்துடன் சுமார் 3 மணிநேரம் மாந்திரீகம் செய்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் இளைஞரின் உறவினர்களையும், மாந்திரீகவாதியையும் வெளியேற்றினர். பின்னர் இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply