ரூட் தல மோதல் – 90 மாணவர்கள் காவல் நிலையத்தில் உறுதிமொழி

Publish by: --- Photo :


சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு மாணவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்து மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர்.

 

அங்கு நடந்த தாக்குதலில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.அங்கு நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர்.இந்த மோதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் இந்த மோசமான செயல்களை நிறுத்த காவல்துறை சார்பில் பல கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ரூட் தல எனப்படும் 90 மாணவர்கள் மாணவர்கள் கண்டறியப்பட்டு காவல்துறையினர் அழைத்து வரப்பட்டனர்.

 

அதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் இனி எந்தவித வன்முறையிலும் ஈடுபட மாட்டோம், எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் என ஒரேகுரலாக உறுதிமொழி எடுத்தனர். பின்னர் சட்டத்தை மீறி எந்த ஒரு தவறு செய்தாலும் அவர்களை கைதுசெய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு என பிராமண பத்திரம் எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Leave a Reply