பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை- வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுப்பு

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர், பிரதமர் மோடிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.

 

அதற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சரும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் இந்தியா இயல்பான நல்லுறவு நிலையையே கடைபிடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். அதனால் பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.


Leave a Reply