ஹரியானாவில் பெண் சிறுத்தை ஒன்று மரத்தின் மீது ஏறிய போது உயர்மின்னழுத்தம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. மந்தவார் கிராமத்தில் இன்று காலை 8 மணியளவில் மரத்தின் மீது ஏறிய சுமார் 2 வயது சிறுத்தை மின்கம்பியில் சிக்கி சடலமாக தொங்கியதை கண்ட மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 9 மணிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற ஆபத்தான மின் கம்பிகள் செல்லும் இடத்தில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்பது விதியாகும். ஆனால் மின் துறை லைன் மேன் அதை வெட்டுவதற்கு வனத்துறையிடம் எந்த அனுமதியும் கோரவில்லை என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற இடங்களில் வனத்துறையின் அனுமதி இல்லாமலேயே கிளைகள் வெட்ட அனுமதி வழங்கியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.