தென்காசியில் இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே  இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். முகமது என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க  முயன்ற போது அதனுள் இருந்து ஒரு வகையான சப்தம் கேட்டு சந்தேகமடைந்து பார்த்த போது பாம்பு புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 

இதை தொடர்ந்து வனத்துறை மற்றும் பொது இயற்கை அமைப்பினர் வந்து 2 மணி நேரம் போராடி பாம்பை மீட்டனர். அது கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு என்பதால், பிடிபட்டதும் படம் எடுத்து பயமுறுத்தியது. பின்னர் அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.


Leave a Reply