வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்.

கோவை கணபதி பகுதியிலுள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.

 

இம்முகாம் வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் தலைவர்
தீப்திரோமேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது வாலன்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் சிறந்த முறையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலன்களை செய்து வருகின்றோம்.

 

கோவை, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இலவச மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றோம். 6வது முறையாக இலவச மருத்துவ முகாம் செய்து வருகின்றோம். இந்த முகாமில் சர்க்கரை நோய், பிபி, இருதய நோய், ஆஸ்துமா, எலும்பு முறிவு, கைகால் வலி, மூட்டு வலி, வயிற்று புண் போன்ற நோய்களுக்கு இந்த முகாமில் இருதய மருத்துவம், பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட இலவச ஆலோசனைகள் வழங்கப்படும். மற்றும் இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை மூலம் செய்து கொடுக்கப்படும்.

மேலும் எங்களது இந்த டிரஸ்ட் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றோம் மேலும்,இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் பயன் பெற்றதாகவும் தெரிவித்தார்.

 

இம்முகாமில், கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் சுபாஷ், சிவபாலன், வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் நிர்வாகிகள் ரமேஷ் துரை, ராஜ் திலக், மனிஷ், தினேஷ், ரோகித், பார்த்திபன் என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply