மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மையத்திற்கு என்ன கிடைத்தது தெரியுமா?

Publish by: சிறப்பு நிருபர் --- Photo : கோப்பு படம்


மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு எதிர்பார்ப்பதை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது-

 

நேர்மையான வழியில் சென்றால், வெற்றி பெற முடியும் என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்து அளவிற்கு மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையை இப்படி வாரி அணைத்து விட்டு, எழுந்து நடக்க, ஓட விடுவார்கள் போலதான் நாங்கள்.

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், எங்களுக்கு பாராட்டுக்கள் பத்திரிக்கை மூலமாக மக்களிடம் இருந்து வந்த வண்ணம் இருக்கிறது என தெரிவித்தார்.

 

மக்கள் நீதி மையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள தொகுதிகளில் அக்கட்சி அதிகபட்ச வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. தேர்தலில் முதல்முறையாக மக்கள் நீதி மையம் 3.98 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply