பரமக்குடியில் பட்டையை கிளப்பிய மழை! மண்ணும் மனமும் குளிர்ந்ததால் மகிழ்ச்சி!!

Publish by: நமது நிருபர் --- Photo : கா. மகேந்திரன்


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக, பரமக்குடி பகுதியில் கனமழை பெய்தது.

 

இந்த மழையால் மண்ணும் குளிர்ந்து, மக்களின் மனமும் குளிர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களில் பலர், மழையில் நனைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Leave a Reply