ஆர்.எஸ். மங்கலம் அருகே, முறைகேடாக மணல் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்; நான்கு லோடு லாரி மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகா, சேர்த்திடல் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சூர்யா, வயது 28. இவர் கோட்டக்கரை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்து வருவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் தமிம்ராஜா தலைமையில் ஆனந்தூர் வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் ஆகியோர் அடங்கிய ஒரு தனிப்படையினர், திருவாடானை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது சேர்த்திடல் கிறிஸ்தவ கோயில் அருகே பட்டா இடத்தில் நான்கு லாரி மணல் கொட்டி, விற்பனைக்காக இருந்ததை வருவாய்த்துறையினரும், போலீசாரும் கண்டறிந்தனர். மணலை பறிமதல் செய்து, சூர்யாவை ஆர்.எஸ் .மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.