அதிமுக அரசை கவிழ்க்க துடிக்கும் எதிர்க்கட்சிகள்! ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிப்பதாக, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று, கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

 

 

தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய அளவில் பா.ஜ.க, தமிழக அளவில் அதிமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி ஆகும். எடப்பாடி அரசு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அசராமல் ஆட்சி செய்து வருகிறது. எனவே,அவர்களுடைய வெற்றி உறுதி. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் குறை ஏதுமில்லை.

 

ஏழை,எளிய மக்கள் தலை நிமிர்ந்து வாழவும், கஷ்டமில்லாமல் வாழவும் அவர்கள் வாழ்வு செழிப்படைய வேண்டும் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிக்கின்றன.அதற்கு எப்பொழுதும் இடம் கொடுத்து விடாதீர்கள் என்று பேசினார்.

 

பிரச்சாரத்தின் போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Leave a Reply