திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.
திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந மூன்று நாட்களாக இளங்கலை பட்டப்படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு நடை பெற்றது. இது மே 10ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இக்கல்லூரியில் சேர, மாணவ, மாணவியர் போட்டி போட்டு ஆர்வம் காட்டியதால், கலந்தாய்வு அரங்கு நிரம்பி வழிந்தது. இடம் கிடைக்காமல் மாணவர்கள் பலர் வருத்தத்துடன் சென்றனர். முதல்கட்ட கலந்தாய்வில் ஏராளாமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில், அரசு விதிக்களுக்குட்பட்டு கலந்தாய்வு நடை பெற்றது.
போராசிரியர்களை கொண்டு, கலந்தாய்வுக்கும், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு குழுவும், சான்றிதழ் சரிபார்ப்பு ஒரு குழுவும், மாணவர்களின் விருப்பப்படி துறைகளை ஒதுக்குவதற்கு குழுவும் அமைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது என்று, கல்லூரி முதல்வர் இராமையா தெரிவித்தார்.
முதல் கலந்தாய்வில் பி.ஏ தமிழ் இலக்கிய துறை மற்றும் பி.எஸ்.சி ஆடை வடிவமைப்பு துறையில் அனைத்து இடங்களும் நிரம்பின. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரி கட்டணத்தை உடனே செலுத்தினர். பிற துறைகளில் ஒரு சில இடங்களே காலியாக உள்ளன. மொத்தம் 835 இடங்களில் 730 இடங்கள் நிரம்பி விட்டன. இன்னமும், 105 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும். காலியாக உள்ள இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்; இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் +2 மற்றும் +1, அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் ஜாதிச் சான்றிதழனை கொண்டு வர வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக, கல்லூரி முதல்வர் இராமையா தெரிவித்தார்.