ரிஷப் பண்டிற்கு தமிழ் சொல்லித்தரும் தோனி மகள்! வைரலாகி வரும் மழலையின் வீடியோ!!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ… ஆ… சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை கேப்டன் தோனி, தான் விளையாடும் இடங்களுக்கு தனது மனைவி மற்றும் மகள் ஜிவாவை அழைத்து செல்கிறார். தோனி விளையாடும் போது, இருவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

 

சென்னை அணியின் கேப்டன் என்பதாலோ என்னவோ, தோனிக்கும் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் அளப்பறிய ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல், அவரது செல்ல மகளும் தமிழ் வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோ அவ்வப்போது வெளியாகி, டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

 

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்டிற்கு, தோனி மகள் ஜிவா, தனது மழலை மொழியில் தமிழில் அ..ஆ.. சொல்லித்தரும் வீடியோ வெளியாகி, பலரையும் ரசிக்க வைத்துள்ளது. இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

திருக்குறள் சொல்லி ஹர்பஜன் டிவிட்!

 

இதற்கிடையே, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில், சென்னை அணி வெற்றி பெற்றதும், ஹர்பஜன் சிங், வழக்கம் போல் தமிழில் டிவிட் செய்து, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

 

 

அதில், ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்துவிடல்; சறுக்கினாலும் யானை யானை தான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்தத்தில் நாங்க, நாங்க தான். மீண்டும் ஒரு ஐ.பி.எல். சரித்திர பயணத்தை நோக்கி’ என்று, ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply