பயணிகளின் கனிவான கவனத்திற்கு…! பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்!!

Publish by: --- Photo :


பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 

ஈரோடு-கரூர்-திருச்சி வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி வண்டி எண் 76836 கரூர்-திருச்சி பயணிகள் ரயில், மே 14 ஆம் தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் 76833 திருச்சி-கரூர் ரயிலும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

 

வண்டி எண் 56320 கோவை-நாகர்கோயில் விரைவு ரயில், மே 10 மற்றும் மே 14 ஆம் தேதிகளில் ஈரோடு-சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. பசூர், ஊஞ்சலூர், கொடுமுடி, புகலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

 

வண்டி எண் 56712, பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில், மே 10 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் ஈரோடு – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 56825 ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் ரயில், மே 10 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் ஈரோடு-கரூர் இடையே பகுதியாக நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் கரூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.

 

வண்டி எண் 56841, திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில், கரூர்-ஈரோடு இடையே மே 10 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் பகுதியாக நிறுத்தப்படுகிறது. வண்டி எண் 56110 ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், கரூர் -திருச்சி இடையே பகுதியாக மே 14 ஆம் தேதி நிறுத்தப்படுகிறது.

 

வண்டி எண் 56826 திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில், மே 10 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். வண்டி எண் 56713 திருச்சி-பாலக்காடு விரைவு பயணிகள் ரயில், மே 14 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


Leave a Reply