கோவையில் நெசவுத் தொழிலாளி தற்கொலை! தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : -கோவை விஜயகுமார்


கோவை அருகே, நெசவுத்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லியோ ராஜ் (25 ). இவர், கைத்தறியில் பட்டுச்சேலைகளை நெசவு செய்து வியாபாரம் செய்து வந்தார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையடைந்த லியோ ராஜ், நேற்று மாலை பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து தாயனூர் செல்லும் வழியில் உள்ள கட்டாஞ்சி மலையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நெசவுத்தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

காவல் துறையினர் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கட்டாஞ்சி மலையில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Leave a Reply