சினிமாவுக்கு முழுக்கு போடும் சூப்பர் ஸ்டார்! காரணம் ரொம்ப சிம்பிள்!

தென்னிந்திய முன்னணி சீனியர் நடிகரான, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாக, கேரள திரை உலகில் பலமாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.

 

கடந்த 40 ஆண்டுகளாக மலையாள திரை உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். இன்றைய இளம் கதாநாயகர்களுக்கு சவால் விடும் வகையில், வித்தியாசமான, அதிரடியான கதாபாத்திரங்களில் மோகன் லால் நடித்து அதிசயக்க வைக்கிறார். மோகன் லால் நடிப்பில் ஆண்டுக்கு 4 படங்களாவது ரிலீஸ் ஆகிவிடுகிறது.

 

ஆனாலும், இனியாவது முழுமையாக குடும்பத்தினருடன் செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். விரைவில் தான் இயக்கப் போகும் மலையாள படத்திற்கு பிறகு, முழுமையாக சினிமாவுக்கு முழுக்கு போடும் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.


Leave a Reply