தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி, மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோல், அரவக்குறிச்சி தொகுதிக்கு பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சூலூர் தொகுதிக்கு எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.