திட்டமிட்டபடி தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு, 91 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள் 40 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும், அதேநாளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

 

இதற்கிடையே ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்றக்கோரி கிறிஸ்தவ  அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

ஆனால், இதை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  எனினும், உச்ச நீதிமன்றமும் இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. எனவே, திட்டமிட்டபடி தமிழகத்தில் வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.


Leave a Reply