கார், பங்களாவை அபகரிக்கும் முயற்சியில், நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் சுப்பிரமணி தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு சமூகவலைத்தளங்களை மூடேத்தும் ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு திரையுலகில் பலர் மீது செக்ஸ் புகார் சொல்லி சினிமா வட்டாரத்தில் பேரும் அதிர்வலையை கிளப்பினார். தற்போது சென்னையில் தங்கி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷூட்டிங் இல்லாத நேரத்தில், ஸ்ரீ காந்த் மாதிரி போனியாகாத ஹீரோக்களின் செக்ஸ் லீலைகளை தோலுரித்து தொங்கவிடும் ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ராணா குடும்பத்தை அடிக்கடி விளாசிக் கொண்டிருக்கிறார்.
சென்னைக்கு வந்திறங்கிய ஸ்ரீரெட்டி முகத்தில் ஷாலை கட்டிக்கொண்டு ஓலா கேபில் வந்த அவர் ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படம் ரிலீஸ் ஆகும் முன் பங்களா வீடு, ஆடி கார் என பயங்கர வசதியாக செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி இரவு 11 மணிக்கு வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணி தனது ஆடையை களைத்து பிடித்து இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை அதிகமானதால் நான் தான் காரணம் என்று நினைத்து சுப்பிரமணி என்னை தாக்கியுள்ளார் என்கிறார் ஸ்ரீரெட்டி.
பைனான்சியர் சுப்பிரமணி என் ஆடி காரை அபகரிக்க முயலும் அவர், என்னை அடைய நினைக்கிறார். அவரால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி அது குறித்து தெலுங்கானா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.