தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்!

கோயம்புத்தூர்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குறும்படம் போட்டு காட்டினார். இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார்.அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவதை போலவே இவர் இதில் வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடம் விளக்கம் அளித்தார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசிய வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டார். ”1000 பேர் சாக வேண்டியது, 13 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்” என்று தமிழிசை கூறிய வீடியோவை ஒளிபரப்பினார்


Leave a Reply