--- --:--:-- --

வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 10 பேர் கைது..!

4

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமுகை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

 

இந்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

 

இதில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

Right Menu Icon