--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்த் – முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு.. காரணம்?

1

டிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அரை மணி நேரம் பேசினார். நவராத்திரி விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் பல்வேறு காரணங்களால் கலந்து கொள்ளவில்லை.

 

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் சென்னையில் உள்ள இல்லத்திற்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பில் அரை மணி நேரம் ஓபிஎஸ் – ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, ரஜினிகாந்துக்கு, ஓபிஎஸும் அவரு மகன் ரவிந்திரநாத் இருவரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினியே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் அவர் நெல்சனுடன் இணைவார் என்றும், சுந்தர்.சி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அண்மையில் வெளியான ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கலவையான விமர்சனங்களால் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon