திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரன் கோயிலுக்கு இளைஞர்கள் நடைபயணம்..!
திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக சென்றனர். கர்நாடகா மாநிலம் கோடகல்லி கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. கோடவல்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்தனர்.
மேலும் போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கவும் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் சிலர் பெண் கிடைக்க வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன் மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றது குறிப்பிடத்தக்கது.





