--- --:--:-- --

நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!

2

துரை செல்லூரில் நாம் தமிழர் கட்சயின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் இருந்து 100 மீட்ட்ர் தொலைவிலும் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் சென்னையில் உள்ள போதும் அமைச்சரின் வீடு அமைந்துள்ள வல்லபாய் தெரு போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

 

அந்தப் பகுதியில் எப்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இப்படி ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நிகழ்ந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon