--- --:--:-- --

செய்தியாளர் சந்திப்பில் நிதானம் இழந்த அமெரிக்க அதிபர்..!

5

மெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்து நிருபரை திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

 

அப்பொழுது டூசி என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆத்திரமடைந்த அவர் செய்தியாளரை திட்டும் வகையில் முணுமுணுத்தார். எனினும் அவரது பேச்சு பதிவானதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஏற்கனவே கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மிக அருமையான கேள்வி கேட்பதாக பாராட்டுவது போல டூசியை அதிபர் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon