--- --:--:-- --

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்..!

4

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கடுமையான உத்தரவுகளை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

 

இவரது தற்கொலைக்கு நீதிபதி மட்டுமே காரணம் எனக் கூறி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மேலும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புகார் மனு அனுப்பினர்.

 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாக்கியம் என்பவரை சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி (பொது) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon