--- --:--:-- --

செவிலியர் செய்த சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்..!

Children's Health Deteriorating In Yemen 2020

SANA'A, YEMEN - DECEMBER 13: A nurse checks a child who is suffering malnutrition at a hospital receiving treatment on December 13, 2020 in Sana'a, Yemen. (Photo by Mohammed Hamoud/Getty Images)

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சளி என்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு செவிலியர் சிகிச்சை பார்த்ததால் அந்த குழந்தை உயிரிழந்தது.

 

கணேஷ் குமார் சோனியா தம்பதியினரின் ஆண் குழந்தை ஓராண்டாக சளி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் விடியற்காலை நாற்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க தயாராக மருத்துவர் இல்லாததால் அவரது ஆலோசனையின் படி செவிலியர் குழந்தைக்கு திருப்தி அளித்துள்ளார்.

 

அங்கிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். குழந்தை வீட்டில் உறங்கிய நிலையில் 10 மணியளவில் இருமல் பிரச்சினை வந்துள்ளது. மீண்டும் நாற்றம்படி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்பொழுது பணியில் இருந்த மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்ததும் குழந்தை உயிரிழந்தது தெரிய வர மருத்துவமனையில் கதறி அழுதார்.

 

Right Menu Icon