பஸ் ஏற வந்தவரை உல்லாசத்திற்கு அழைத்த பெண்..!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நபரை உல்லாசத்துக்கு அழைத்து சென்று பணம் பறித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரேஷ் என்ற இளைஞர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரை பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறி உல்லாசத்திற்காக தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த மூன்று பெண்கள் சுரேசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணம் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்ட விரட்டியடித்துள்ளனர். இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





