விபத்தில் தோழியை கொன்ற பிறகு எப்படி இருக்கிறீர்கள் என யாஷிகாவை கேட்ட ரசிகர்..?
யாஷிகா 2021ம் ஆண்டு ஜுலை மாதம் பயங்கர விபத்தில் சிக்கினார். அதில் யாஷிகாவிற்கு உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட, 6 மாதங்களுக்கு மேல் நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.
இந்த விபத்தில் யாஷிகாவுடன் இருந்த அவரது தோழி பவானி வல்லிசெட்டி உயிரிழந்தார். ரசிகரின் கேள்வி யாஷிகா அதன்பிறகு சமூக வலைதளங்களில் அதிகமாக வராமல் இருந்தார்.
டுவிட்டரில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய யாஷிகாவிடம் ஒரு ரசிகர், குடித்துவிட்டு கார் ஓட்டிய கேஸ் என்ன ஆனது, விபத்தில் தோழியை கொன்ற பிறகு எப்படி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு யாஷிகா, நான் குடிக்கவில்லை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எனக்கு சுயநினைவு இல்லை, மருத்துவமனை ரிப்போர்ட்டில் நான் குடித்ததாக இல்லை. ஒருவரை பற்றி பேசும்முன் தெளிவாக எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வதந்தியை பரப்ப வேண்டாம் என பதில் கூறியுள்ளார்.





