வேலை தேடி வந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடுமை..!
Back lit image of the silhouette of a woman with her hands pressed against a glass window. The silhouette is distorted, and the arms elongated, giving an alien-like quality. The image is sinister and foreboding, with an element of horror. It is as if the 'woman' is trying to escape from behind the glass.
சென்னைக்கு வேலை தேடி வந்த அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர் பகுதியில் உள்ள விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அங்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. விடுதி மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடுவிக்கப்பட்ட பெண்களை விசாரித்தபோது அவர்கள் வேலை தேடி வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.





