பேனரால் எழுந்த பிரச்சனை..! விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பீஸ்ட் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட உள்ளதை முன்னிட்டு வில்லியனூர் பகுதியில் விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.
இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என கூறி அதனை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பேனரை கழட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி பெறாமல் அரசியல்வாதிகள் மட்டும் பேனர்கள் வைக்கலாமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





