ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பிஎஸ்பி கட்சி அலுவலக வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுத்த தமிழக அரசு..!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பிஎஸ்பி கட்சி அலுவலக வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி தர வேண்டும் என அக்கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் அரசிடம் அனுமதி கோரினர்.
எனினும், இந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




