பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு போட்ட திட்டம்..!
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் அரிசி கரும்பு அல்லது சர்க்கரை ஆகியவை பரிசுத்தொகுப்பாக வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு விவசாயிகளின் அதன் கருதி ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





