பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்! பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டுமென ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரத்தில் ஷாங்காய் அமைப்பின் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நரேந்திரமோடி அண்மையில் தான் இலங்கைக்கு பயணமான போது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட அந்தோனியா தேவாலயத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.

 

அந்த புனித மிக்க தேவாலயத்தில் அப்பாவி போது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை தான் கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கு நிதியளிக்கும் நாடுகளே , பயங்கரவாதத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது நடவடிக்கைகள் எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் என்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறினார்.