மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அலட்சியமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






