கோவாக்‌சின், கோவி‌‌‌‌‌ஷீல்டு தடுப்பூசி சந்தைப்படுத்தலுக்கு அனுமதி..!

கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழக்கமான சந்தைப்படுத்தலின் கீழ் விநியோகிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வழக்கமான சந்தை விற்பனைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தன.

 

இவற்றை பரிசீலித்த அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் சந்தைப்படுத்துதலுக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டும் பயன்படுத்த வேண்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த அனுமதியை தொடர்ந்து தடுப்பூசிகளை சிறிய கிளினிக்குகள், மருத்துவமனைகளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இவற்றை மருந்துக்கடைகளில் விற்க அனுமதிக்கப்படவில்லை.

 


கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து உபயோகிக்கலாம்..!

கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து உபயோகித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தடுப்பூசிகளை கலந்து வைத்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐ‌சி‌எம்‌ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

 

இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில இடங்களில் தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ர் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.