உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டினால் 25,000 அபராதம்..!

புதுச்சேரியில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

 

விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உரிய ஆவணங்களின்றி ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இவ்வாறு வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 


தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 483 பேர் பலி!

மிழகத்தில் தற்போது 2,88,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 32,263பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 34 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது.

 

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,061பேரும், திருப்பூரில் 1,252 பேரும், ஈரோட்டில் 1,488 பேரும், சேலத்தில் 1, 290 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp