ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் ரூ.10,000 அபராதம்..!

ணவகத்தில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்ட நபருக்கு உணவகம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சாலையில் உள்ள மெக்டொனல்ஸ் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஒரு நபர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார்.

 

அவர்கள் சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க வந்த பொழுது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டொனல்ஸ் சாப்பிட 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி அவர் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால் பத்தாயிரம் ரூபாய் அபராதமாக விரிக்கப்பட்டது.

 

இது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதுவரை எந்த உணவகத்திலும் 90 நிமிடங்கள் மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகை இல்லை எனவும் உணவை அவசரமாக சாப்பிட தாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 


பான் கார்டை தொலைத்தால் ரூ.10,000 அபராதம்..!

ற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமாக திகழ்கிறது.

 

இவர்களது முக்கியமான ஆதாரத்தை எங்காவது தொலைத்து விட்டால் பெரிய பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வைப்பை மதிப்பிடுவது உள்ளிட்ட அனைத்து மத பரிவர்த்தனைகளையும் வருமான வருமான வரி பயன்பாட்டில் இருந்து தான் கண்காணிக்கிறது.

 

பான் கார்டை தொலைத்து விட்டால் ரூ.10,000 அபராத தொகை செலுத்த வேண்டும். அதோடு இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும்.

 


வாகன பதிவு சான்றிதழ் வழங்க தாமதம்..ரூ.10,000 அபராதம்..!

வாகன பதிவு சான்று அளித்து தாமதித்த விற்பனை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், அவிநாசி சாலையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அவருக்கு வாகன பதிவு சான்றிதழ் 17 மாதங்கள் வரை வழங்காமல் இருந்துள்ளது.

 

வழக்கறிஞர் மூலம் சட்ட முறையாக அணுகிய போது இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் குறைத்தீர் நீதிமன்றத்தை பார்த்திபன் நாடினார்.

 

விசாரணையின் முடிவில் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும், வழக்குச் செலவாக 3 ஆயிரம் ரூபாயும் வாகன விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 


உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டினால் 25,000 அபராதம்..!

புதுச்சேரியில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

 

விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உரிய ஆவணங்களின்றி ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இவ்வாறு வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 


செல்பி எடுத்தால் ரூ.2,000 அபராதம்..!

சென்னை ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் புறநகர் ரயிலில் இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

 

இதையடுத்து படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் படியில் பயணம் செய்பவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போர் மீது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.