ரூ.5,000த்தை தர மறுத்த தாயை கொன்று சூட்கேசில் வைத்த கொடூர அரக்கன்..!

ரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி தனது தாயிடம் 5000 ரூபாய் கேட்டுள்ளார்.

 

அப்பொழுது பணம் தர மறுத்ததால் தாயை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்துள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்ததில் தாயை கொலை செய்தது அம்பலமானது.

 

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


ரூ.5,000 கடன் வாங்க சென்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதம்..!

கிருஷ்ணகிரியில் போதையில் காரை ஓட்டி சென்றதால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்துள்ளது.

 

இருந்த போதிலும் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டி சென்றதால் அந்த பகுதி மக்கள் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை காட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டியது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார். விசாரணையில் உறவினர் ஒருவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்க சென்று கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.