தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய மற்றும் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இன்று கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்தடுத்து மழை காரணமாக மே 8ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

மிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

 


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!

மிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

மிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தென் கிழக்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இதனால் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.