பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது..உயிர் தப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள்..!

காஞ்சிபுரத்தில் கட்டப்பட்ட மூன்று மாதங்களில் ஊராட்சி மன்ற பள்ளி வகுப்பறையில் மேற்கூரை உடைந்ததில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல்வாய்ப்பாக தப்பினர். காஞ்சிபுரத்தில் சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.

 

மூன்றே மாதங்களில் உடைந்து விழுந்தது. அப்பொழுது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் இறைவணக்கத்தில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

எனவே தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.