முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை..!

நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கமணியின் வீட்டில் உள்ள சொத்து ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு..!

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் நாமக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம், எம்எல்ஏவுக்கு சொந்தமான அறுபத்தி ஒன்பது இடங்களில் இரு தினங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

 

சோதனையை முடித்துக் கொண்டு காவல்துறையினர் காரில் ஏறி செல்ல முற்பட்டபோது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதன் தொடர்ச்சியாக நாமக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.