நாமக்கல் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த நிஷா, மதுரையை சேர்ந்த ராம் பிரசாத் இருவரும் பாலியல் தொழில் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சேலம் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் நடத்திய சோதனையில் ஊழியர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். 6 பெண்களை மீட்ட நிலையில் உரிமையாளரான நிஷா மற்றும் பிரசாத்தை தேடி வருகின்றனர்.