--- --:--:-- --

கொடூரமான முறையில் நடந்த தற்கொலை..!

10

கேரளாவில் கடன் தொல்லை காரணமாக தம்பதிகள் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்த தம்பதிக்கு பிளஸ் டூ படிக்கும் ஒரு மகன் உள்ளார்.

 

அவர் தனது கடை வியாபாரத்திற்காக கடன் வாங்கியுள்ள நிலையில் கடனை அடைக்க முடியாததால் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். வீட்டிலிருந்து வயரை உடலில் சுற்றி மின்சாரம் பாய்ச்சி இருவரும் துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளனர்.

 

காலை வெகு நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த பொழுது அவர்கள் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon