மாமனாரோடு மோதும் மருமகன்!
மேடைக்கு மேடை மாமனார் ரஜினியை புகழ்ந்து பேசும் நடிகர் தனுஷ் தற்போது அவருக்கு எதிராகவே களமிறங்க உள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.
இந்த படம் தொடங்கும்போது பொங்கல் பண்டிகைக்கு அதாவது ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தர்பார்.
இதற்கிடையே தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள படத்தயாரிப்பு நிறுவனம் இந்தப் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் தர்பார் வெளியான ஒரு வாரம் கழித்து ஜனவரி 16ஆம் தேதி தான் பட்டாஸ் வெளியாக உள்ளது.
இந்த ரிலீஸ் தேதியை வைத்தே விநியோகஸ்தர்களிடம் நடக்கும் வியாபாரங்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் மற்றும் அவரது மருமகன் தனுஷின் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளதால் இருவரது ரசிகர்களும் ஒரே சமயத்தில் உற்சாகம் அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட அஜித்தின் விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதேபோல் மாமனார் மருமகனின் படங்களுமே சேர்ந்து வெற்றி பெறுமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




