--- --:--:-- --

மிகவும் கூலான இடத்திற்கு மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ள புகழ்..!

12

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் சிரித்து பார்த்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் கரு சமையல் என்றாலும் காமெடி என்பது அதிகமாக இருந்தது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வர மக்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்தது.

 

3வது சீசன் அண்மையில் தான் முடிந்தது, அடுத்த சீசன் பிக்பாஸ் 6 முடிவுக்கு வந்தால் தான் தொடங்கும் இது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த 3 சீசன்கள் மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் புகழ். இவர் இப்போது படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

அண்மையில் தனது நீண்டநாள் காதலியையும் திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில் புகழ் தனது மனைவியுடன் மிகவும் கூலான இடமான ஊட்டிக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு தனது மனைவியுடன் செய்த ரீல்ஸ் வீடியோ வெளியிட அதற்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

Right Menu Icon