ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகிறது..!
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் டிரைலர் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது.
இந்த படம் ஜனவரி 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வரும் 3ம் தேதி வெளியிடப்பட உள்ளது.







